நம்பிக்கையான படைப்பு ஒரு கிடாயின் கருணை மனு!

Thursday, April 20, 2017

'ஈரோஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையா ('காக்கா முட்டை'  பட இயக்குநர் மணிகண்டனின் உதவியாளர்) இயக்கியுள்ள படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'. இந்தப் படத்தில் விதார்த், டப்பிங் கலைஞர் ரவீணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'படத்தின் தலைப்பே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதேபோல, கதையும் அமைக்கப்பட்டிருக்கிறது' என்கிறது படக்குழு.

இப்படத்தை பெரிய ஈரோஸ்  தயாரித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்துவிட்டது. 

இப்படத்தை தயாரிப்பது குறித்து 'ஈரோஸ் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் சாகர் சத்வானி பேசும்போது, 

"புதுமையான கதைக்களங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம், சமீபத்தில் வெளியான 'துருவங்கள் 16', 'குற்றம் 23', 'மாநகரம்' மற்றும் '8 தோட்டாக்கள்' படங்கள். நிச்சயமாக அந்த வரிசையில் எங்களின் 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படமும் இடம் பெறும். சுரேஷ் சங்கையாவின் கதை மீதும், அவர் படத்தை உருவாக்கிய விதமும் தான் எங்களின் அந்த உறுதியான நம்பிக்கைக்கு காரணம். 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம் அந்த நம்பிக்கையை மீண்டும்  உறுதிப்படுத்தும்" என்றார். 

சிறந்த கதையையும், வலிமையான திரைக்கதையையும் நம்பி களத்தில் இறங்கினால் எப்போதும் வெற்றியே என்பதை படத் தயாரிப்பாளர்கள் புரிந்துகொண்டால், மேலும் பல நம்பிக்கையான படைப்புகள் வெளியாகும். அந்தப் புரிதலை 'ஒரு கிடாயின் கருணை மனு' படம் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles