அரியர்ஸ் பேப்பரை முடிக்க போராடும் நாயகி!

Thursday, April 20, 2017

'சதுரங்க வேட்டை' படத்தில் நட்டிக்கு ஜோடியாக நடித்தவர் இஷாரா நாயர். இந்தப் படத்தில் பானு என்கின்ற வெகுளி கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தது. தற்போது, இவர், 'அதி மேதாவிகள்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கும் இப்படத்தை 'அப்சலூட் பிக்சர்ஸ்' தயாரித்துள்ளது. இப்படத்தின் நாயகனாக நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேஷ் ரவி நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்துள்ளது பற்றி நாயகி இஷாரா நாயர்,

"நான் முன்பு நடித்த கதாபாத்திரத்தின் சாயல் என்னுடைய புதிய கதாபாத்திரத்திற்கு இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன். அப்படி தேர்வு செய்த திரைப்படம் தான் 'அதி மேதாவிகள்'. இந்தப் படத்தில் சுஜி என்கின்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இரண்டு நண்பர்கள் தங்களின் கல்லூரியில் வைக்கும் அரியர்ஸ் பற்றியும், அந்த அரியர்ஸை கடந்து வர அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் தான் இப்படத்தின் ஒரு வரி கதை. 

இந்தப் படத்திற்காக என்னை உடல் எடையை குறைக்க சொன்னார் இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன். அதற்கு அவர் கொடுத்த கால அவகாசம்  வெறும் 10 நாட்கள் தான். இருந்தாலும் இதை நான் சவாலாக எடுத்து கொண்டு, 10 நாட்களில் உடல் எடையை குறைத்தேன். மற்ற எல்லா படங்களில் இருந்தும் 'அதி மேதாவிகள்' படம் தனித்து விளங்கும். காதல் இல்லாமல் வெறும் நட்பை மட்டுமே இப்படம் உள்ளடக்கி இருப்பதே அதற்கு காரணம். படத்தின் வெளியீட்டிற்காக ஆவலோடு காத்து கொண்டிருக்கிறேன்" என்றார். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles