ராதாமோகனோடு மீண்டும் கை கோர்க்கிறார் அருள்நிதி! 

Wednesday, April 19, 2017

தமிழ் சினிமாவில் கவித்துவமாக கதை சொல்வதில் திறமையானவர் இயக்குநர் ராதாமோகன். வாழ்வின் அபத்தங்களை தனக்கான திரை மொழியில் வெளிப்படுத்துவதில் வல்லவர். தற்போது, அருள்நிதியை நாயகனாக வைத்து 'பிருந்தாவனம்' படத்தை இயக்கி வருகிறார். அதேபோல, தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிக்கிறார் அருள்நிதி. வித்தியாசமான கதைக்களம், மாறுபட்ட பாத்திரம் என்றால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார்.

இந்நிலையில், தனது அடுத்தப் படத்திலும் ராதாமோகனோடு கைகோர்க்க உள்ளார். 

இப்படம் குறித்து அருள்நிதி பேசும்போது,

"எனக்கும், ராதாமோகன் சாருக்கும் இடையே எப்போதும் ஒரு நல்ல புரிதல் உண்டு. 'பிருந்தாவனம்' படம் மிக அழகாக உருவாகி இருப்பதை எண்ணி, ஒட்டுமொத்த படக்குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அவருடன் இணைந்து பணியாற்றும் போது எனக்கு  சிறப்பான அனுபவம் கிடைக்கின்றது  என்பதை நான் மகிழ்ச்சியோடு சொல்லுவேன். தற்போது நாங்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்திருப்பது எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. கதைக்களத்தை முடிவு செய்த நாங்கள், படத்தின் தலைப்பை சரியான நேரத்தில் அறிவிக்க இருக்கின்றோம்.

தற்போது படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகின்றது. வருகின்ற ஜூலை மாதம் முதல் நாங்கள் படத்தின் வேலைகள் ஆரம்பிக்க இருக்கின்றோம்" என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles