மாறுபட்ட பாத்திரத்தில் சரத்குமார்!

Tuesday, April 18, 2017

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களை தந்து, அனைத்து சென்டர் ரசிகர்களையும் ஒருசேர கவர்ந்தவர் நடிகர் சரத்குமார். பிறகு, அரசியலில் முழு கவனம் செலுத்தியதால் அதிகமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது மீண்டும் களத்தில் இறங்கிவிட்டார். இனி அடுத்தடுத்து அவரிடம் இருந்து, மாறுபட்ட பாத்திரங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். அந்தவகையில், 'சென்னையில் ஒரு நாள்-2' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் ராம் மோகன் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ஜெ.பி.ஆர். இயக்குகிறார். 

இப்படம் குறித்து இயக்குநர் பேசும்போது,

"பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் த்ரில்லர் கதையை தழுவி இப்படத்தை எடுக்கிறோம். இப்படத்தில் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 'நிசப்தம்' படத்தின் குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் நடிக்கிறார். படத்தில் ரகசிய உளவாளி பாத்திரத்தில் நடிக்கிறார் சரத்குமார். இதனால் படத்தின் திரைக்கதை பரபரப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் அனைவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும்" என்றார் ஜெ.பி.ஆர். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலான காட்சிகள் கோவையில் படமாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles