பாலிவுட்டுக்குள் நுழைகிறாரா நயன்தாரா?

Wednesday, April 5, 2017

தமிழ் சினிமாவில் ‘உன்னை போல் ஒருவன்’ மற்றும் ‘பில்லா 2’ ஆகிய படங்களை இயக்கியவர் சக்ரி டோலெட்டி. தற்போது இவர் நயன்தாராவை வைத்து 'கொலையுதிர்காலம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். பாலிவுட்டில் திரைப்பட தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ‘பூஜா என்டர்டைன்மெண்ட் அன்ட் பிலிம்ஸ் லிமிடெட்’ நிறுவனம், இப்படத்தை தயாரிக்கின்றது. அதன் நிறுவனர் வாசு பக்னானி பேசும்போது, 
 

“சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட முக்கிய காரணம், தமிழில் வெளியான சின்ன மாப்பிள்ளை திரைப்படம் தான். அந்த படத்தை ஹிந்தியில் நான் ‘கூலி நம்பர் 1’ என்ற தலைப்பில்  ரீமேக் செய்தேன். அதனைத் தொடர்ந்து சதி லீலாவதி படத்தை ரீமேக் செய்தேன். அதற்குப் பிறகு, இப்போது முதல் முறையாக கொலையுதிர் காலம் படம் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் அடியெடுத்து வைக்கிறேன். நான் பார்த்த சிறந்த நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. அவரை ஹிந்தி பட உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. தமிழில் நாங்கள் தயாரிக்கும் முதல் படத்திலேயே அவரோடு இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு பெருமையாக இருக்கின்றது. இதே படம் ஹிந்தியில் தமன்னா மற்றும் பிரபுதேவா நடிக்க தயாராகிறது.  தென்னிந்திய திரையுலகில் அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து, தயாரிப்பு மற்றும் விநியோக துறையில் நாங்கள் ஈடுபட இருக்கின்றோம்.’’ என்றார்.

‘கூலி நம்பர் 1’ திரைப்படம் மூலம் தயாரிப்பு துறையில் நுழைந்த ‘பூஜா என்டர்டைன்மெண்ட் அன்ட் பிலிம்ஸ் லிமிடெட்’ நிறுவனத்திற்கு இந்த ‘கொலையுதிர் காலம் 31- வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles