விவசாயிகளுக்காகவும், தயாரிப்பாளர்களுக்காகவும் பாடுபடுவேன்!  நடிகர் விஷால் வாக்குறுதி!

Monday, April 3, 2017

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல், சென்னையில் நேற்று நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட  நடிகர் விஷால், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,

“ஒட்டு அளித்த அனைத்து முதலாளிகளுக்கும் நன்றி. எங்கள் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது. வரலாற்று முக்கியத்துவமான விஷயங்கள் நடக்கப் போகிறது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொற்காலம் போல செயல்படுவோம். மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

இளைஞர்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். திருட்டு விசிடி, ஆன்லைன் ப்ரைசி, தமிழ் ராக்கர்ஸ் ஆகியோருக்கு இப்போது சொல்கிறேன். நாங்கள் ஜெயித்து விட்டோம், இப்போது வந்து பாருங்கள். முதல்கட்டமாக விவசாயிகளுக்கும், சில தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கையும் நிறைவேற்ற பாடுவேன். எங்கள் அணியினர் ஜெயிப்பார்கள் என்று நம்புகிறேன்.’’ என்றார்.

மேலும், துணைத் தலைவர்களாக கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜும், செயலாளராக கே.இ.ஞானவேல் ராஜா, கதிரேசனும், பொருளாளராக எஸ்.ஆர்.பிரபுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். செயற்குழு உறுப்பினர்களாக 21 பேர் தேர்வாகியுள்ளனர். நம்ம அணி சார்பாக போட்டியிட்ட பெரும்பாலானோர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles