‘ஹே பெண்ணே பெண்ணே’  பாடல் வெற்றியைக் கொண்டாடும் ‘கட்டப்பாவ காணோம் ‘ டீம்! 

Tuesday, September 20, 2016

‘கட்டப்பாவ காணோம்’ மூலமாக, கோலிவுட்டில் வெற்றியைச் சுவைக்க வந்திருக்கிறார் இயக்குனர் மணி சேயோன். சிபிராஜ், ஐஸ்வர்யா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் நாயகன் ஒரு வாஸ்துமீன். ஆமாங்க, ஆரோவானா என்ற ஒரு மீனை மையமாக வைத்தே இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இதுவே, இந்தப் படத்தின் மீது கோலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ’பாகுபலியைக் கட்டப்பா ஏன்  கொன்னாரு?’ என்ற கேள்வியை விட, ’ஒரு மீனை வச்சு எப்படி படமெடுக்க முடியும்’ங்கிறதுதான் கொக்கி போட்டு அனைவரையும் இழுக்கிறது. 

 

இந்தச் சூழலில், இளசுகளுக்குப் பிடிக்கும் வகையில் ஒரு ’பெப்பி சாங்’ வெளியிட்டிருக்கிறது கட்டப்பாவ காணோம் படக்குழு. அந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கபாலியில் மாயநதி தந்த உமாதேவியிடமிருந்து பிறந்திருக்கிறது, இந்தப் பாடலின் வரிகள். ‘ஹே பெண்ணே பெண்ணே’ என்று தொடங்கும் இந்தப் பாடல், கூடிய விரைவில் அனைவராலும் முனுமுனுக்கப்படலாம். தூய தமிழ் வார்த்தைகளை ட்ரெண்டியான மெட்டுகளில் சேர்த்து, பழமையை நினைவூட்டும் விதமாக புதிய வரிகள் தொடுப்பதில் வல்லவர் உமா. அது இந்தப் பாடலிலும் வெளிப்பட்டிருக்கிறது.  

 

“சந்தோஷ் தயாநிதியின் அழகான பெப்பி ரொமான்டிக் சாங் இது. மெட்டு ரொம்ப ட்ரெண்டியா இருக்கும். இதை சித் ஸ்ரீராம், அலீஷா தாமஸ், ஐஸ்வர்யா குமார்  பாடியிருக்காங்க. இது ஒரு அழகான மெட்லீ பாடல். சமூக வலைதளங்களில் இந்தப் பாடலைக் கொண்டாடுறதைப் பார்க்கும்போது, ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இந்தப் பாடல், யூத்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இதே எனர்ஜியோட, அடுத்த பாடலையும் ரிலீஸ் செய்யப்போறோம்” என்று ‘ஹே பெண்ணே பெண்ணே’ பற்றிச் சிலாகித்தார் படத்தின் இயக்குனர் மணி சேயோன். இந்தப் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பு, ஒட்டுமொத்தக் குழுவையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles