செய்திகளை திரித்து எழுதாதீர்கள்! நடிகர் விவேக் வேண்டுகோள்!

Tuesday, October 25, 2016

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பட இயக்குநர் கோகுல் இயக்கியுள்ள படம் 'காஷ்மோரா'. நடிகர் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அனைவரும் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது, நடிகர் விவேக்கும் தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். 

"பொதுவாக தமிழ் சினிமா நடிகைகள் யாரும் படத்தின் புரமோஷனுக்கு வருவதில்லை. காரணம் கேட்டால், "நாங்கள் வந்தால் படங்கள் ஓடுவதில்லை" என்று சென்டிமென்ட்டாக பதிலளித்து, திகைக்க வைத்துவிடுகிறார்கள். அதேபோல "தங்களுடைய லாஸ்ட் பேமண்ட்டை வாங்கினால் படம் ஓடாது" என்று எண்ணி, அந்தப் பேமெண்ட்டை நடிகைகள் விட்டுவிட்டால் தயாரிப்பாளர்களுக்குப் புண்ணியமாகப் போகும்" என்கிற தொனியில் விவேக் நகைச்சுவையாகப் பேசினார். 'இப்படத்தில் நடித்துள்ள நயன்தாராவைத்தான் அவர் சுட்டிக்காட்டுகிறார்' என்கிற கோணத்தில், இதுபற்றி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

 

’தான் நகைச்சுவையாகப் பேசிய விஷயம், திரிக்கப்பட்டு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது’ என்று தெளிவுபடுத்திய நடிகர் விவேக், இதுபற்றி மனம் இதழுக்குப் பேட்டியளித்தார். 

 

" 'ஐயா' படத்தில் இருந்தே, நான் நயன்தாராவின் ரசிகன். அவரைப் பற்றி மிக உயர்வாக, அடிக்கடி ட்வீட் செய்திருக்கிறேன். நேற்று, நான் நகைச்சுவையாகப் பேசியதை சிலர் திரித்து, பத்திரிகைகளில் செய்தியாகப் போட்டுவிட்டார்கள். இதையறிந்த நான் திகைத்துப் போய்விட்டேன்!

 

உண்மையில், நயன்தாரா குறித்து அவதூறாக எதுவும் பேசவில்லை என்பதை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன். பொதுத்தளத்தில் நின்று நடுநிலையோடு மக்களிடம் செய்தியைக் கொண்டுசெல்பவர்கள் பத்திரிகையாளர்கள். தயவுகூர்ந்து நடிகர்களாகிய நாங்கள் பேசுவதை, சுவராஸ்யத்திற்காக மாற்றி எழுதாதீர்கள். இதை விவேக்கின் அன்பு வேண்டுகோளாக எடுத்துக்கொள்ள வேண்டும்!" என்றார். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles