தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது காஷ்மோரா!

Wednesday, October 19, 2016

முதல் படத்திலேயே (பருத்திவீரன்) நடிப்பில் சிகரம் தொட்டவர் நடிகர் கார்த்தி. அதன்பிறகு தொடர்ச்சியாக படங்கள் நடித்தாலும், அடுத்த தளத்துக்கு அவரால் நகர்ந்து செல்ல முடியவில்லை. இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் படத்தில் நடித்தபோது அடுத்த இடத்தை அடைந்தார். 'கொம்பன்', 'தோழா' என படத்துக்குப் படம் வெரைட்டி காட்டி வரும் கார்த்திக்கு, 'காஷ்மோரா' படம் சினிமா கேரியர்லியே குறிப்பிடத்தகுந்த படைப்பாக இருக்கும் என கோடம்பாக்கத்தில் இப்போதே பேச்சு அடிபட தொடங்கியுள்ளது. 

இதனை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் அவரே இப்படி சொல்லியிருக்கிறார். "காஷ்மோரா கதாபாத்திரம் இயக்குநர் கோகுலின் கடுமையான உழைப்பால் உருவானது. இந்த கதாபாத்திரத்தை உருவாக்க இயக்குநர் கோகுல் அதிக காலம் எடுத்து கொண்டார். ஏனென்றால் இப்பாத்திரம் மிகவும் புதுமையானது , தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் கையிலெடுக்காத ஒரு கதாபாத்திரம். ஆம் , காஷ்மோரா என்பவன் இது வரை தமிழ் சினிமாவில் யாரும் ஆழமாக சொல்லாத , தொடாத பில்லி , சூனியம் , ஏவல் போன்றவற்றை செய்யும் பிளாக் மேஜிசியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்பாத்திரம் ராஜ் நாயக் பாத்திரத்தில் இருந்து முற்றிலும் வேறுபடும். நிச்சயம் இதை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ரசிப்பார்கள்". 

படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.  'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பட இயக்குநர் கோகுல் இயக்கத்தில் வெளிவரும் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பு சாபு ஜோசப் , கலை ராஜீவன். தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது 'காஷ்மோரா'!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles