டண்டணக்கா வழியில் டமாலு டுமீலு!

Tuesday, November 29, 2016

இயக்குநர் லக்‌ஷ்மன் இரண்டாவதாக இயக்கியுள்ள படம் 'போகன்'. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி,  ஹன்சிகா மோத்வானி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘டமாலு டுமீலு’ பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

சினிமாவில் புகழ்பெற்ற இரண்டு இசையமைப்பாளர்கள் ஒரு பாடலுக்கு ஒன்றிணைந்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அளவே இருக்காது. அப்படியொரு பாடலாக உருவாகி இருப்பது தான் 'போகன்' திரைப்படத்திற்காக டி இமான் இசையில் அனிருத் பாடியிருக்கும் 'டமாலு டுமீலு' பாடல். 

இதுகுறித்து இயக்குநர் லக்‌ஷ்மன் பேசும்போது, "என்னுடைய முதல் படமான 'ரோமியோ ஜூலியட்' படத்தில் அனிருத்-இமான் கூட்டணியில் உருவான 'டண்டணக்கா' பாடல், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. தற்போது, எங்களின் 'போகன்' படத்தில் அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் கைகோர்த்து இருப்பது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது. நிச்சயமாக, எங்களுடைய 'டமாலு டுமீலு' பாடல் ரசிகர்களுக்கு ஒரு கிறிஸ்துமஸ் விருந்தாக இருக்கும்" என்றார். 

இந்தப் பாடலை எம்.ஜி. ஆர். முதல் நம்பியார் வரை தமிழ் திரையுலகில் கோலோச்சிய எல்லா கதாநாயகர்களுக்கும் வில்லன்களுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கின்றனர். பலே ஐடியா! யூடியுப்பில் வெளியாகியுள்ள பாடல் உருவாக்கத்தின் வீடியோ சரசரவென ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles