கறுப்புப்பணத்தைப் பற்றிய படம் இது! அரவிந்த் ஆகாஷ் ஓபன் டாக்!! @மனம் எக்ஸ்க்ளுசிவ்

Tuesday, November 22, 2016

தமிழ் சினிமாவில் பல குணச்சித்திரப் பாத்திரங்களுக்கு உயிரூட்டியவர் அமரர் மேஜர் சுந்தர்ராஜன். தனது தனித்துவ நடிப்பால், தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றவர். அவரது மகனும் நடன இயக்குநருமான கௌதம் இயக்கியுள்ள படம் ’கண்ல காச காட்டப்பா’. இந்தப் படத்தில் நாயகனாக அரவிந்த் ஆகாஷும், நாயகியாக சாந்தினியும் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 25-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது. 
 

’கண்ல காச காட்டப்பா’ நாயகன் அரவிந்த் ஆகாஷிடம் பேசியபோது, 
"இந்தப் படத்துல நடிக்கிறது, எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏன்னா, படத்தோட இயக்குநர் கௌதம் சாரோட மனைவி கோகிலா ஹரிராம் மேடத்துகிட்டதான், நான் முறைப்படி நடனம் கத்துக்கிட்டேன். அதற்குப் பிறகு, கல்யாண் மாஸ்டர் மூலமாக யூனியனில் மெம்பரானேன். இந்தப் படத்தின் மூலமாக, எல்லோருடன் மீண்டும் பணிபுரிய வாய்ப்பு கிடைச்சிருக்கு!

'கண்ல காச காட்டப்பா' படத்தின் வேலைகளை, எட்டு மாதங்களுக்கு முன்பே முடிச்சிட்டோம். படத்தை வெளியிடத் திட்டமிட்ட நிலையில், திடீரென்று கறுப்புப்பணம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அது, இந்தப் படத்துக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. படத்தில் பணியாற்றிய எல்லோருமே, ஏற்கனவே எனக்கு பழக்கமானவங்க. இந்தப் படமும், எனக்கு ’பிக்னிக்’ போன பீல்தான் கொடுத்துச்சு. 'சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்'ல எல்லோருமே என்னுடைய பிரெண்ட்ஸ்; 'கண்ல காச காட்டப்பா' டீம் என்னோட பேமிலி!

பொதுவா, காசு எங்கே புகுந்து எங்கே வரும்னு தெரியாது. அப்படி, இந்தப் படம் கறுப்புப்பணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கு. அமைச்சர் ஒருத்தரோட பிளாக் மணி, ஒரு ஊர்ல இருந்து மற்றொரு ஊருக்குப் போகுது. போய்ச் சேருகிற ஊரில் உள்ள மக்களிடம், அந்தப் பணம் மாட்டிக்கொள்கிறது. இதனால் ஏற்படுகிற களேபரம்தான் கடஹி. இதனை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறோம். இந்தப் படத்தில், எனக்கு தாத்தாவாக எம்.எஸ்.பாஸ்கர் சார் நடிச்சிருக்காரு. எங்க ரெண்டு பேரு காம்பினேஷன்ல வர்ற காட்சிகள், ரசிக்கும்படியா இருக்கும். படம் தொடங்கியதில் இருந்து முடியறவரைக்கும் செம காமெடியாக போகும். அதுக்கு, நாங்க ரெண்டு பேரும் கியாரண்டி!" என்று முடித்துக்கொண்டார். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles