யுவனின் அதிரடி இசையமைப்பில் 'யாக்கை’!

Friday, November 18, 2016

ஒரு படத்தின் வெற்றியில், நிச்சயமாக இசைக்கும் முக்கிய பங்குண்டு. தமிழ் சினிமாவில் பாடல்களாலேயே வெற்றிப் பெற்ற படங்கள் மிக அதிகம். இசைஞானி இளையராஜாவின் பெயர் போஸ்டரில் இடம்பிடித்ததாலேயே, அந்தப் படங்கள் உடனே விற்பனையான சம்பவங்களும் இங்கே உண்டு.

அந்த வரிசையில், இப்போது இளையராஜாவின் மகன் யுவன்ஷங்கர் ராஜாவும் இடம் பிடித்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்போதெல்லாம், தேர்ந்தெடுத்து படங்களை ஒப்புக்கொள்கிறார் யுவன். அந்தவரிசையில், சமீபத்தில் அவரது குட்புக்கில் இடம்பிடித்த படம் ‘யாக்கை’!

 

'பிரிம் பிச்சர்ஸ்' முத்துக்குமரன் தயாரிப்பில், இயக்குநர் குழந்தை வேலப்பன் இயக்கி இருக்கும் படம் 'யாக்கை'. இப்படத்தில் கிருஷ்ணா, சுவாதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் பிரகாஷ் ராஜ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். 

 

யுவன் இசையமைப்பில் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ள படம் யாக்கை. இந்தப் படத்தில் அவரது இசையில் தனுஷ் பாடிய  'சொல்லி தொலையேன்மா' பாடலும், சின்மயி மற்றும் யுவன் பாடியிருக்கும் 'நான் இனி காற்றில்...' பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், அந்தப் படத்துக்கு சிறப்பான பின்னணி இசையையும் சேர்த்திருக்கிறார் யுவன் என்று மகிழ்கிறது படக்குழு. தற்போது, அதனை தொழில்நுட்பரீதியாக மேலும் மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறதாம்!

 

இப்படம் குறித்து இயக்குநர் குழந்தை வேலப்பன் பேசும்போது, "ஒரு திரைப்படத்திற்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு இயக்குநராக நன்கு அறிவேன். அந்த வகையில், யுவன்ஷங்கர் ராஜாவின் மெய்மறக்கும் பின்னணி இசை, இந்தப் படத்திற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது. வர்த்தக ரீதியாக 'யாக்கை' திரைப்படம் வெற்றி பெற, ஆணிவேராகச் செயல்படப்போவது அவருடைய இசை தான். வருகின்ற டிசம்பர் மாதத்தில், இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது..." என்றார். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles