ரிலாக்ஸா பாட வச்சாங்க! பாடகி கரிஷ்மா 

Tuesday, November 15, 2016

வெங்கட் பிரபு படம் என்றாலே, அதில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்கும். சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்’ படத்தில் இடம்பிடித்துள்ள ‘இது கதையா’  பாடலைப் பாடியிருக்கும் அந்த க்யூட் வாய்ஸுக்கு சொந்தக்காரர் க்ரேஷ்மா. ஏற்கனவே ‘தனி ஒருவன்’ படத்தில் ‘காதல் கிரிக்கெட்’ பாடலைப் பாடியவர்.

கிரிக்கெட் ஸ்பெஷல் படமான ‘சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்’ஸில் பாடி சிக்ஸர் அடித்திருக்கிறார் இந்தக் குட்டிப்பெண். இவர், தற்போது பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார் என்பது கொசுறு செய்தி. 

“யுவனோட இசைன்னா எனக்கு உயிர். சின்ன குழந்தையிலிருந்தே, நான் அவரோட பெரிய பேன். அவரு இசையில் பாடினதுல, எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. ‘இது கதையா’ங்கிற மெலடி பாடலை, ஷான் ரோல்டன் கூட சேர்ந்து பாடியிருக்கேன். பார்த்தி பாஸ்கரோட பாடல் வரிகள் அத்தனை அழகா இருக்கும். பாடலைப் பாடி முடிச்சதும், எனக்கு ‘இது கதையா’ பாடல் மேல காதல் வந்திருச்சு. 

யுவனும், வெங்கட் பிரபு அங்கிளும் என்னை ரிலாக்ஸா பாட வைச்சாங்க. மலேசியா ஆடியோ லாஞ்சுக்கு கூப்பிட்டிருந்தாங்க, ரொம்ப பெருமையா இருந்துச்சு. அவங்களுக்கு என்னோட நன்றிகள் பல” என்று முடித்துக்கொண்டார் க்ரேஷ்மா. 

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles