வெங்கட் பிரபு கேட்டபோது, ரொம்ப ஆச்சரியமா இருந்தது! கவிஞர் மதன் கார்க்கி

Tuesday, November 15, 2016

சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ் ஆடியோவை, ’டூபாடூ’ என்கிற தளம் மூலமாக வெளியிட்டிருக்கிறார் கவிஞர் மதன் கார்க்கி. அவசர வேலை காரணமாக வெளிநாடு சென்ற இந்த டெக்கி கவிஞர், நமக்காக செல்பி வீடியோ அனுப்பி வைத்தார். அதில், அவரது செகண்ட் இன்னிங்ஸ் அனுபவங்கள் நிறைந்திருந்தது 

“சென்னை 28 பார்ட் 1 படத்துக்கு, உங்களை மாதிரி நானும் ஒரு பெரிய ரசிகன். மக்கள் மத்தியில ரொம்ப பாப்புலரான படம் அது. தமிழ் சினிமா உலகத்துல நிறையா மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதாவது, நமக்குள்ள புது ரத்தம், புதுவிதமான ஹ்யூமர், இசைன்னு எல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டுவந்த படம் சென்னை 28. இந்தப் படத்தோட இரண்டாம் பாகத்துல ஒரு பாடலை எழுதப் போறோம்னு நினைத்த உடனே, எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. சென்னை 28 குழுவோடு சேர்ந்தா எப்படி இருக்குமோ, அப்படியான பாடல் வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு. 

 

என்கிட்டே வெங்கட் பிரபு கேட்டபோது, எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருந்தது. ’என்னங்க தப்பா எனக்கு கால் பண்ணிட்டீங்களா’ன்னு கூட, நான் அவருகிட்ட கேட்டேன். இதுக்கு முன்னாடி, யுவன்- வெங்கட் பிரபு கூட்டணியில ‘மாஸ்' படத்துல பாடல்கள் எழுதியிருக்கேன். அது வேற டைப் பாடல்கள். இப்போ, இதுல ‘ஹவுஸ் பார்ட்டி ..‘ எழுதியிருக்கேன். ரொம்ப சவாலான பாடல் இது. அதைத்தவிர நிரஞ்சன் பாரதி, பார்த்தி பாஸ்கர் போன்றவங்களும் இதுல பாடல்கள் எழுதியிருக்காங்க. த்ரில்லிங்கான மேட்சை பார்த்துட்டு வீட்டுக்குப் போனீங்கன்னா எப்படியிருக்கும், அப்படியொரு பீலிங் சென்னை 28 இன்னிங்ஸ் 2 பார்க்குறவங்களுக்கு இருக்கும்” என்றார் மதன் கார்க்கி. வீ ஆர் வெயிட்டிங்! 

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles