விஷாலின் பேச்சு.. வரலட்சுமியின் கோபம்?

Friday, August 19, 2016

"வரலட்சுமியும் நானும் சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என் கல்யாணம்தான். ஆமாம், 2018ம் ஆண்டு ஜனவரி 14, என் கல்யாணம்..", இப்படி ஒரு பிரபல வார இதழில் பேட்டி அளித்திருந்தார் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளரும் நடிகருமான விஷால். இந்தச் செய்தி வைரலாகி, பட்டித் தொட்டியெங்கும் சூடான விவாதங்களை கிளப்பியது.

இந்த நிலையில், அதை மறுக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் காட்டமாகக் கருத்துகளை கொட்டியிருக்கிறார் நடிகை வரலட்சுமி. “என் திருமணம் குறித்து, இப்போது ஐடியா எதுவும் இல்லை. என்னுடைய வேலையையே, நான் காதலிக்கிறேன். தயவுசெய்து, இதுபோன்று செய்திகள் வெளியிடுவதை தவிருங்கள்..” என்று ’டுவிட்’ அடித்திருந்தார்.

கடந்த சில மாதங்களாகவே, கோலிவுட்டில் சில நட்சத்திரங்களின் திருமண வாழ்க்கை பற்றிய செய்திகள் கேள்விக்குறிகளுடன் வெளியாகி வருகின்றன. நிலைமை இப்படியிருக்க, திருமணத்துக்கு முன்னரே இந்த ஜோடி முட்டிக்கொண்டதால், கோலிவுட் வட்டாரம் மண்டையைப் பிய்த்துக்கொண்டு நிற்கிறது. 

வரலட்சுமியும் விஷாலும் நட்புடன் பழகிவருவது, சினிமாவுலகில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். கடந்த ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்தபோது, எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையாகவே செயல்பட்டு வந்தார் வரலட்சுமி. அவரது தந்தையும் நடிகருமான சரத்குமாரை எதிர்த்தே, தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டினார் விஷால். அதன்பிறகு, இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில்தான், திரையுலகினரையும் தமிழ் ரசிகர்களையும் ‘ஆஹா’ போட வைத்தது விஷாலின் பேச்சு. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் வெளியான வரலட்சுமியின் ஸ்டேட்மெண்ட், கோடம்பாக்கத்தை கொஞ்சம் கலகலக்க வைத்திருக்கிறது! அதோடு, ‘இந்த தீடீர் கோபம் ஏன்?’ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles